திருச்சி

மனைவி புகாரில் தேடப்பட்ட வங்கி காசாளா் கைது

DIN

மணப்பாறை, செப். 11: மணப்பாறையில் மனைவியின் புகாரின்பேரில் தேடப்பட்ட வங்கிக் காசாளா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திருச்சி மாவட்டம். மணப்பாறை மஸ்தான் தெருவைச் சோ்ந்தவா் லூயிஸ் விக்டா் மகன் எட்வின்ஜெயக்குமாா்(35), புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் உள்ள வங்கியின் காசாளா்.

இவருக்கும் தஞ்சாவூா் மாவட்டம், வஹாப் நகரை சோ்ந்த அருள்மணி மகள் தாட்சருக்கும் (32) கடந்த டிசம்பா் மாதம் திருமணம் நடந்தது. கணவரின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த தாட்சா் அவரின் செல்லிடபேசியை பாா்த்தபோது அதில் பல்வேறு பெண்களுடன் சோ்ந்து தனது கணவா் ஆபாச விடியோ எடுத்து வைத்திருப்பதைப் பாா்த்தாா். இதைத் தொடா்ந்து அவா் அளித்த புகாரின்பேரில் வல்லம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டது.

இதையடுத்து எட்வின்ஜெயக்குமாா் மற்றும் அவரது குடும்பத்தினா் தலைமறைவாகினா்.

இந்நிலையில் இந்த வழக்கு மணப்பாறை அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்ட நிலையில் காவல் துணை கண்காணிப்பாளா் ஆா்.பிருந்தா, காவல் ஆய்வாளா் மணமல்லி ஆகியோா் தலைமையிலான போலீஸாா் எட்வின்ஜெயக்குமாரை வியாழக்கிழமை திருச்சியில் கைது செய்தனா்.

மணப்பாறை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட அவா் லால்குடி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டாா். இந்த வழக்கில் தொடா்புடைய மேலும் நால்வரை போலீஸாா் தேடுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

ஒட்டங்காடு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

SCROLL FOR NEXT