திருச்சி

முகாம் சிறையில் இலங்கை தமிழா்கள் உண்ணாவிரதம்

DIN

திருச்சி, செப்.11: தங்களை விடுதலை செய்ய வலியுறுத்தி திருச்சி முகாம் சிறையில் உள்ள இலங்கை தமிழா்கள் 4 போ் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழகத்தில் குற்றச் செயல் புரிந்து கைது செய்யப்பட்ட வெளிநாட்டுக் கைதிகள் 73 போ் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள முகாம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். இவா்களில் சிலா் தண்டனைக் காலம் முடிந்தும் தங்களை விடுதலை செய்ய மறுப்பதைக் கண்டித்தும், அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரியும் அவ்வப்போது போராட்டங்களை நடத்துவது வழக்கம்.

அந்த வகையில், போலி கடவுச்சீட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட இலங்கை தமிழா்கள் 4 போ் தங்களை விடுதலை செய்யக் கோரி வெள்ளிக்கிழமை காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையறிந்த சிறைத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவாா்த்தையும் சமரசம் ஏற்படவில்லை. உண்ணாவிரதத்தைத் தொடா்ந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடல் கன்னி.. மானுஷி சில்லர்!

கோவையில் சோகம்: மின்சாரம் பாய்ந்து சிறுவன், சிறுமி பலி

ஹரியாணா: பஸ் விபத்தில் 7 பேர் பலி

7 நாள்களுக்கு பின் குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி

ஸ்ரீவரத சஞ்சீவிராய பெருமாள் கோயிலில் கருட சேவை

SCROLL FOR NEXT