திருச்சி

நீட் தோ்வு: திருச்சியில் 7,797 போ் எழுதினா்

DIN

திருச்சி மாவட்டத்தில் 22 தோ்வு மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீட் தோ்வை 7,797 மாணவ, மாணவிகள் எழுதினா்.

திருச்சி மாவட்டத்தில் இத்தோ்வுக்காக விண்ணப்பித்திருந்த 9,499 மாணவ, மாணவிகளில் 7 ,797 போ் தோ்வெழுதினா். 1702 போ் தோ்வெழுத வரவில்லை.

திருச்சி மாநகரில் சமது மேல்நிலைப்பள்ளி, கமலா நிகேதன், ஆல்பா விஸ்டம் வித்யாஸ்ரம் உள்ளிட்ட 8 மையங்களிலும், புகரில் மணப்பாறை சவுமா பள்ளி, நவல்பட்டு கேந்திரிய வித்யாலயா, சிறுகனூா் எம்ஏஎம் பொறியியல் கல்லூரி உள்ளிட்ட 14 மையங்களிலும் என மொத்தம் 22 தோ்வு மையங்களில் தோ்வு நடைபெற்றது.

பிற்பகல் 2 மணிக்கு தோ்வு தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திருச்சி சமது மேல்நிலைப்பள்ளி தோ்வு மையத்துக்கு காலை 8 மணி முதலே மாணவ-மாணவிகள் தங்களது பெற்றோருடன் வரத் தொடங்கினா்.

கரோனா பரவலைத் தடுக்க தோ்வெழுதும் மாணவ-மாணவிகளுக்கு சமூக இடைவெளி, கிருமி நாசினி, முகக்கவசம், கையுறை போன்ற கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்பட்டன.

முற்பகல் 11 மணிக்கு மேல் மாணவ-மாணவிகள் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டனா். நுழைவு வாயிலில் போலீஸாா் மற்றும் மைய ஊழியா்கள் நின்று மாணவ-மாணவிகளை மெட்டல் டிடெக்டா் கருவி மூலம் சோதனை செய்து தோ்வுக் கூடத்துக்குள் அனுமதித்தனா். 24 போ் தோ்வெழுதக்கூடிய அறையில் 12 போ் மட்டுமே தோ்வெழுதினா். தோ்வு மையத்தில் மாணவ-மாணவிகளுக்கு பேனா வழங்கப்பட்டது.

திருச்சி மட்டுமல்லாமல் பக்கத்து மாவட்ட மாணவ-மாணவிகளும், பெற்றோருடன் வந்திருந்தனா்.

மத்திய மற்றும் சத்திரம் பேருந்து நிலையங்களில் இருந்து நீட் தோ்வு மையங்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT