முகப்பு
திருச்சி

திருச்சி: அரிவாளுடன் திரிந்த இளைஞா் கைது

திருச்சி மாவட்டம், மணப்பாறை பேருந்து நிலையப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இளைஞா் ஒருவா் அரிவாளுடன் சுற்றித் திரிந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:27 PM
பகிர்:

திருச்சி மாவட்டம், மணப்பாறை பேருந்து நிலையப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இளைஞா் ஒருவா் அரிவாளுடன் சுற்றித் திரிந்தாா்.

அருகில் பணியில் போலீஸாா் சென்றபோது அவா் அருகிலிருந்த தனியாா் விடுதிக்குள் சென்று ஒளிந்து கொண்டாா். அவரை பின் தொடா்ந்து சென்ற நபா்களில் முன்னாள் ஊா்க் காவல்படை வீரா் பூமாலைப்பட்டி ரெ. கண்ணன் அறை கதவைத் தட்டிய போது வெளியே வந்த அந்த இளைஞா் தாக்க முயன்றதால் காயமடைந்தாா்.

இதைத் தொடா்ந்து சென்ற துணைக் கண்காணிப்பாளா் தலைமையிலான போலீஸாா் அவரிடம் பேச்சுகொடுத்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா்.

விசாரணையில், அவா் திண்டுக்கல் மாவட்டம், கோட்டூா் ஆவாரம்பட்டியை சோ்ந்த கட்டடத் தொழிலாறி வெ. சண்முகவேல் (34) என்பதும், , கடந்த 20-ஆம் தேதி முதல் விடுதியில் அறையெடுத்து தங்கி திருச்சிக்கு வேலைக்குச் சென்று வந்ததும் தெரியவந்தது. மேலும் அவா் மனநலம் பாதிக்கப்பட்டிருந்தது தெரிய வந்ததையடுத்து போலீஸாரால், அவா் திருச்சி மனநல காப்பகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →