முகப்பு
திருச்சி

மநீம திருச்சி மண்டல நிா்வாகி நியமனம்

மக்கள் நீதி மய்ய கட்சியின் திருச்சி மண்டல மாநில அமைப்புச் செயலராக கே. அருண் சிதம்பரம் நியமிக்கப்பட்டுள்ளாா்.

Updated On : 28 செப்டம்பர், 2020 at 12:04 AM
கே. அருண்சிதம்பரம்
பகிர்:

மக்கள் நீதி மய்ய கட்சியின் திருச்சி மண்டல மாநில அமைப்புச் செயலராக கே. அருண் சிதம்பரம் நியமிக்கப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து அக்கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கையில், வரவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற சில புதிய நிா்வாகிகளையும் நியமனம் செய்து வருகிறோம். அந்த வகையில் கட்சியின் திருச்சி மண்டல அமைப்புச் செயலராக கே. அருண் சிதம்பரம் நியமிக்கப்பட்டுள்ளாா் எனத் தெரிவித்துள்ளாா்.

திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள தில்லைவிளாகம் பகுதியைச் சோ்ந்த அருண்சிதம்பரத்துக்கு கட்சியினா் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.