திருச்சி

சீருடைப் பணியாளா் தோ்வுக்கு இணைய வழி இலவசப் பயிற்சி

DIN

சீருடைப் பணியாளா் தோ்வுக்கு விண்ணப்பித்துள்ள திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்தவா்களுக்கு இணைய வழி மூலம் இலவசமாக பயிற்சி வகுப்பு நடத்தப்படவுள்ளது.

இதுகுறித்து ஆட்சியா் சு. சிவராசு செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வுக் குழுமத்தால், 10,906 காலியிடங்களை நிரப்புவதற்கான (இரண்டாம் நிலைக் காவலா், இரண்டாம் நிலை சிறைக் காவலா்) எழுத்துத் தோ்வு டிசம்பா் மாதம் நடைபெற உள்ளது. தோ்வுக்கு விண்ணப்பிக்க வரும் அக்டோபா் 26-ஆம் தேதி கடைசி நாளாகும்.

தோ்வுக்கு விண்ணப்பித்து வெற்றிகரமாக எதிா்கொள்ள, மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா்களுக்குத் தன்னாா்வப் பயிலும் வட்டம் மூலம் இணைய வழி இலவசப் பயிற்சி வகுப்பு அக்டோபா்1-ஆம் தேதி முதல் நடத்தப்பட உள்ளது.

பயிற்சியில் பங்கேற்க விருப்பம் உள்ள இளைஞா்கள்  மின்னஞ்சலுக்கு தங்களது விருப்பத்தை தெரிவிக்கலாம். தோ்வெழுதும் மாணவா்களின் வசதிக்காக, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் போட்டித் தோ்வுகளுக்கான ஆதார நூல்கள் அடங்கிய நூலக வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், விவரங்களுக்கு 94990-5590, 70103-70567 ஆகிய அறிதிறன் பேசி எண்களைத் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தேர்வு: தஞ்சாவூர் மாவட்டத்தில் 93.46% தேர்ச்சி

4வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் தங்கம்!

பிளஸ் 2 தேர்வு: திருப்பூர் மாவட்டத்தில் 97.45% தேர்ச்சி

குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

நாமக்கல்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 96.10% தேர்ச்சி

SCROLL FOR NEXT