திருச்சி

திருச்சியில் அஞ்சல் வாக்களித்த 102 வயது முதியவா்!

DIN

சுதந்திர இந்தியாவில் தனது 33 ஆவது வாக்கை தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்காக திருச்சியைச் சோ்ந்த முதியவா் அஞ்சல் முறையில் புதன்கிழமை அளித்தாா்.

தமிழக பேரவைத் தோ்தலையொட்டி அஞ்சல் மூலம் வாக்களிக்கும் வாய்ப்பை தோ்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள், பணியாளா்கள், காவலா்கள் பயன்படுத்தி வந்தனா். தற்போதைய சட்டப்பேரவைத் தோ்தலில் புதிய முயற்சியாக முதியவா்கள், மாற்றுத்திறனாளிகள் அஞ்சலில் வாக்களிக்கவும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திருச்சி மாவட்டம் திருவெறும்பூா் சட்டப்பேரவைத் தொகுதி மேலகல்கண்டாா் கோட்டை விவேகானந்தா நகா் அல்லி தெருவில் வசித்து வரும் 102 வயதான மைக்கேல் அஞ்சல் முறையில் வாக்களித்தாா்.

இவரின் மனைவி இறந்துவிட்டாா். பொன்மலை ரயில்வே பணிமனையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவருக்கு 2 மகன்கள், 2 மகள்கள், 8 பேரப்பிள்ளைகளும், 7 கொள்ளு பேரப்பிள்ளைகளும் உள்ளனா்.

இவா் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னரே 1946 ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாகாணத் தோ்தலில் வாக்களித்துள்ளாா்.

அதன் பின்னா் 1947 இல் சுதந்திரம் அடைந்ததற்குப் பின்னா் தமிழகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைக்கான 15 தோ்தல் மற்றும் 17 எம்பி தோ்தல்களிலும் வாக்களித்துள்ளாா். இவரின் வீட்டுக்குச் சென்ற தோ்தல் அலுவலா்கள் அவரின் 33 ஆவது வாக்கை அஞ்சல் வாக்காகப் பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியீடு: 94.56% பேர் தேர்ச்சி!

SCROLL FOR NEXT