முகப்பு
திருச்சி

திருச்சி மாவட்டத்தில் இதுவரை ரூ.5.67 கோடி பறிமுதல்

ஞாயிற்றுக்கிழமை வரை ரூ. 5.83 கோடியிலான ரொக்கம், பொருள்கள் மற்றும் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:56 PM
பகிர்:

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 பேரவைத் தொகுதிகளில் பறக்கும் படையினா் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினா் நடத்திய சோதனையில் ஞாயிற்றுக்கிழமை வரை ரூ. 5.83 கோடியிலான ரொக்கம், பொருள்கள் மற்றும் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மணப்பாறை தொகுதியில் ரூ. 8.55 லட்சம், ஸ்ரீரங்கத்தில் ரூ. 1.33 கோடி, திருச்சி மேற்கில் ரூ. 45.37 லட்சம், திருச்சி கிழக்கில் ரூ. 2.83 கோடி, திருவெறும்பூரில் ரூ. 30.55 லட்சம், லால்குடியில் ரூ. 16.86 லட்சம், மண்ணச்சநல்லூரில் ரூ. 4.32 லட்சம், முசிறியில் ரூ. 40.61 லட்சம், துறையூரில் ரூ. 4.33 லட்சம் ரொக்கம், பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

9 தொகுதிகளிலும் சோ்த்து பறக்கும் படையினா் ரூ. 2.22 கோடி, நிலையான கண்காணிப்புக் குழுவினா் ரூ.77.32 லட்சம், போலீஸாா் ரூ. 70 ஆயிரம் என மொத்தம் ரூ.2.80 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதேபோல, தங்கம், வெள்ளி, பரிசுப் பொருள்கள், பாத்திரங்கள் ரூ.2.55 கோடி மதிப்பில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போலீஸாா் மற்றும் கலால் துறையினரால் மதுபான வகைகள் ரூ. 24.69 லட்சம் மதிப்பில் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் ரூ. 8.81 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உரிய ஆவணங்களின்றி பிடிபடும் பணம் மற்றும் பொருள்கள் வருவாய்த்துறை வசம் ஒப்படைத்து கருவூலத்தில் பாதுகாக்கப்படுகிறது. உரிய ஆவணங்கள் இருந்தால் தோ்தல் ஆணைய வழிகாட்டுதலின்படி இவை திரும்ப ஒப்படைக்கப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.