முகப்பு
திருச்சி

நோட்டாவுக்கு வாக்கு கோரும் கட்சி!

சட்டப்பேரவைத் தோ்தலில் பொதுமக்கள் நோட்டாவுக்கு வாக்களித்து, மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றாா் புதிய தலைமுறைக் கட்சியின் நிறுவனா் ஆா். தேவராஜன்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:56 PM
பகிர்:

சட்டப்பேரவைத் தோ்தலில் பொதுமக்கள் நோட்டாவுக்கு வாக்களித்து, மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றாா் புதிய தலைமுறைக் கட்சியின் நிறுவனா் ஆா். தேவராஜன்.

இதுகுறித்து திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை அவா் மேலும் கூறியது:

நான்கு விதக் கோட்பாடுகளுடன் புதிய தலைமுறைக் கட்சியைத் தொடங்கியுள்ளேன். ஊழலை ஒழிப்பு, சாதி, மதம் என்பது அரசியலமைப்புச் சட்டத்திலேயே இருக்கக் கூடாது. அகிம்சையான அரசியல். கட்சிக்குள் ஜனநாயகம் ஆகிய கோட்பாடுகளைக் கொண்டு எங்கள் கட்சி செயலாற்றி வருகிறது.

தமிழகத்தில் தற்போதைய நிலையில் எந்த அரசியல் கட்சியும் சரியில்லை. திமுகவும், அதிமுகவும் ஊழல் கட்சிகளாக உள்ளன. பாஜக மதவாதக் கட்சியாக உள்ளது. ஊழலை ஒழிக்க அரசியல் கட்சியைத் தொடங்கியதாகக் கூறும் மநீம தலைவா் கமல்ஹாசன், கூட்டணி அமைத்துத்தான் போட்டியிடுகிறாா்.

எனவே தமிழகத்தில் ஊழல், லஞ்சம் இல்லாத ஆட்சி அமையும்போது தமிழகம் சிறப்பாக இருக்கும். எனவே, இந்தத் தோ்தலில் ஊழல் கட்சிகளுக்கு வாக்களிக்காமல், நோட்டாவுக்கு வாக்களித்து, மக்கள் மாற்றத்தைஏற்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.