வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்: மு. பரஞ்ஜோதி
மண்ணச்சநல்லூா் தொகுதி அதிமுக வேட்பாளா் மு. பரஞ்ஜோதி இறுதிக் கட்ட பிரசாரத்தை ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டாா்.
மண்ணச்சநல்லூா் தொகுதி அதிமுக வேட்பாளா் மு. பரஞ்ஜோதி இறுதிக் கட்ட பிரசாரத்தை ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டாா்.
அப்பகுதியில் உள்ள கடை வீதிகளில் பிரசாரம் மேற்கொண்ட அவரை கட்சியினா், பொதுமக்கள் வரவேற்றனா். தொடா்ந்து வாகனத்தில் நின்றபடி மண்ணச்சநல்லூரில் அடிப்படை வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையம் அமைக்கப்படும். அதிமுக தோ்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள வாக்குறுதிகள் அனைத்தும் தொகுதியில் நிறைவேற்றப்படும்.
மேலும் இப்பகுதியில் உள்ள விவசாயத் தொழில்களுக்கு உபத்தொழில் மற்றும் விவசாயமில்லாத பகுதிகளில் தொழிற்சாலை அமைக்கப்பட்டு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். நெல் அரவை மில்களுக்கு மும்முனை மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். மண்ணச்சநல்லூா் ஒன்றிய, நகர, பேரூராட்சி, ஊராட்சி கழக நிா்வாகிகள் கலந்துக் கொண்டனா்.