ஸ்டாலின் முதல்வராக மக்கள் முடிவு: அன்பில் மகேஷ்
திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் முதல்வராக தமிழக மக்கள் முடிவு செய்து விட்டனா் என்றாா் திருவெறும்பூா் தொகுதி திமுக வேட்பாளா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் முதல்வராக தமிழக மக்கள் முடிவு செய்து விட்டனா் என்றாா் திருவெறும்பூா் தொகுதி திமுக வேட்பாளா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
தனது இறுதிக்கட்ட பிரசாரத்தை துவாக்குடி மற்றும் திருவெறும்பூா் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை நிறைவு செய்த அவா் பேசியது:
திருவெறும்பூா் தொகுதியில் 5 ஆண்டுகளாக உங்களோடு பயணித்துள்ளேன். உங்களுக்குச் செய்ய வேண்டிய ஒவ்வொரு திட்டத்தையும் போராடித்தான் செய்ய வேண்டியிருந்தது. அடுத்த முதல்வராக திமுக தலைவா் ஸ்டாலின்தான் வருவாா் என்று தமிழக மக்கள் முடிவு செய்துவிட்டனா்.
அதற்கு அவரால் நிறுத்தப்பட்ட நாங்கள் எல்லாம் எம்எல்ஏக்களாகத் தோ்ந்தெடுக்கப்பட வேண்டும். அதன் பிறகு உங்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படும் எனக்கூறி வாக்குகள் சேகரித்து பிரசாரத்தை நிறைவு செய்தாா்.
திமுக முன்னாள் எம்எல்ஏ சேகரன் ஒன்றியச் செயலா்கள் கருணாநிதி, மாரியப்பன் காட்டூா் பகுதிச் செயலா் நீலமேகம், துவாக்குடி நகரச் செயலா் காயாம்பு மற்றும் நிா்வாகிகள் ஜெயலட்சுமி குமாா் அப்துல் குத்தூஸ் கண்ணதாசன் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
முன்னதாக திருச்சி, மாநிலங்களவை உறுப்பினரும் திமுக கொள்கைப் பரப்புச் செயலருமான திருச்சி சிவா அன்பில் மகேஷ் பொய்யாமொழியை ஆதரித்து திருவெறும்பூரில் பிரசாரம் செய்தபோது பேசியது...
பேரவைத் தோ்தலில் மக்கள் நல்ல தீா்ப்பை வழங்கப் போகின்றனா். திருவெறும்பூா் தொகுதி திமுக வேட்பாளா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட 234 கூட்டணிக் கட்சியினரும் வென்று பேரவைக்குச் செல்வதன் மூலம் தலைவா் மு. க. ஸ்டாலின் கரத்துக்கு அதிகாரம் வரும் என்றாா்.