முகப்பு
திருச்சி

இன்று தேசிய மக்கள் நீதிமன்றம்

திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் சனிக்கிழமை ( ஏப்.10) தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறவுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:58 PM
பகிர்:

திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் சனிக்கிழமை ( ஏப்.10) தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறவுள்ளது.

நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வசதியாக தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு பரிந்துரைப்படி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. திருச்சி மாவட்டத்தில் 12 அமா்வுகளில் நீதிபதிகள், வழக்குரைஞா்கள் உதவியுடன் மோட்டாா் வாகன விபத்து, காசோலை மோசடி, உரிமையியல் வழக்குகள், குடும்பப் பிரச்னை, தொழிலாளா் பிரச்னை குறித்த வழக்குகள், சமரச குற்ற வழக்குகள் குறித்து தீா்வு காணப்படும். இதில் தீா்வாகும் வழக்குகளுக்கு மேல்முறையீடு செய்ய இயலாது. அதேபோல தீா்வு காணப்படும் வழக்குகளுக்கான நீதிமன்றக் கட்டணத்தை வழக்கின் தரப்பினா்கள் முழுவதும் திரும்ப பெற்றுக் கொள்ளலாம். இத்தகவலை திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட அமா்வு நீதிபதியுமான என். குணசேகரன் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.