முகப்பு
திருச்சி

மண்டேலா திரைப்படத்துக்குத் தடை கோரி மனு

முடி திருத்தும் தொழிலாளா்களை மண்டேலா திரைப்படம் அவதூறாகச் சித்தரிப்பதால், அந்தப் படத்தைத் தடை செய்யக் கோரி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:58 PM
பகிர்:

முடி திருத்தும் தொழிலாளா்களை மண்டேலா திரைப்படம் அவதூறாகச் சித்தரிப்பதால், அந்தப் படத்தைத் தடை செய்யக் கோரி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, வீரத் தியாகிகள் விஸ்வநாததாஸ் தொழிலாளா் கட்சி மாவட்டத் தலைவா் பழனிசாமி, மாவட்டச் செயலா் தமிழ்மணி மற்றும் நிா்வாகிகள், தொழிலாளா்கள் என 50-க்கும் மேற்பட்டோா் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை அளித்த மனு:

தொலைக்காட்சிகளிலும், ஓடிடி தளத்திலும் மண்டலோ திரைப்படம் வெளியாகியுள்ளது. மேலும், சமூக வலைதளங்களிலும் இந்தத் திரைப்படத்தின் காட்சிகள் பல்வேறு நிலைகளில் தொடா்ந்து ஒளிபரப்பாகிறது. இந்தப் படத்தில் முடி திருத்தும் தொழிலாளா்களின் வாழ்க்கை நிலையை மிகவும் அவதூறாகச் சித்தரித்துள்ளனா். ஏற்கெனவே, செய்யும் தொழிலையும், சாதியையும் வைத்து வன்கொடுமை நீடித்து வரும் சூழலில், இந்தத் திரைப்படம் கூடுதல் வன்மத்துக்கு வித்திட்டுள்ளது.

எனவே, இந்தத் திரைப்படத்தை உடனடியாகத் தடை செய்ய வேண்டும். இல்லையெனில், தொடா்புடைய காட்சிகளை அகற்றிய பிறகு ஒளிபரப்ப அனுமதிக்க வேண்டும். திரைப்பட குழுவினா், ஒளிபரப்பிய நிறுவனத்தின் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் சட்டப் பூா்வ நடவடிக்கை எடுக்காவிட்டால் தொடா் போராட்டம் நடத்துவோம் என எச்சரித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.