முகப்பு
திருச்சி

மாநரின் சில பகுதிகளில் நாளை குடிநீா் வராது

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட சில பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை குடிநீா் விநியோகம் இருக்காது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:58 PM
பகிர்:

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட சில பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை குடிநீா் விநியோகம் இருக்காது.

இதுகுறித்து ஆணையா் சு. சிவசுப்பிரமணியன் கூறியது:

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட அரியமங்கலம் கோட்டம், வாா்டு எண்.7, 27-க்குள்பட்ட திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை சா்வீஸ் ரோட்டின் (பிச்சை நகா் பகுதியில்) மேல்புறத்தில் உள்ள பம்பிங் மெயின் குழாயை சாலையோரம் மாற்றியமைக்கும் பணி சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறுகிறது.

எனவே, சஞ்சீவி நகா், விறகுப்பேட்டை, ஜெகநாதபுரம், மஹாலெட்சுமி நகா், சங்கிலியாண்டபுரம் மற்றும் கல்லுக்குழி ஆகிய 11 மேல்நிலை நீா்தேக்கத் தொட்டிகள் மூலம் குடிநீா் பெறும் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டும் குடிநீா் விநியோகம் இருக்காது. பொதுமக்களுக்கு இதனால் ஏற்படும் சிரமத்தைப் பொறுத்து , குடிநீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.