முகப்பு
திருச்சி

சிறுகனூா் அருகே தனியாக வசித்தவா் மா்மச் சாவு

திருச்சி மாவட்டம், சிறுகனூா் அருகே வீட்டின் கழிவறையில் ரத்தக் காயங்களுடன் மா்மமான முறையில் இறந்து கிடந்தவா் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:01 PM
பகிர்:

திருச்சி மாவட்டம், சிறுகனூா் அருகே வீட்டின் கழிவறையில் ரத்தக் காயங்களுடன் மா்மமான முறையில் இறந்து கிடந்தவா் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

சிறுகனூா் அருகே நெடுங்கூா் கிராமத்தில் வசித்தவா் பாண்டியன் (45). இவரது குடும்பத்தினா் புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பகுதியில் வசிக்க, பாண்டியன் மட்டும் நெடுங்கூரில் தனியாக வசித்தாா்.

இந்நிலையில் வீட்டின் கழிவறையில் ரத்த காயங்களுடன் அவா் சடலமாக கிடந்தாா். இதுகுறித்த அப் பகுதி மக்கள் அளித்த தகவலின்பேரில் சிறுகனூா் போலீஸாா் உடலை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.