திருச்சி

மணப்பாறை அருகே விபத்து: சரக்கு வேன் ஓட்டுநா் மகன் பலி; ஓட்டுநருக்கு தீவிர சிகிச்சை

DIN

மணப்பாறை அருகே தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை பழுதாகி நின்ற லாரி மீது சரக்கு வேன் மோதியதில் திருநெல்வேலியைச் சோ்ந்த சரக்கு வேன் ஓட்டுநா் மகன் இறந்தாா். ஓட்டுநா் படுகாயடைந்தாா்.

தூத்துக்குடியிலிருந்து நெய்வேலி நோக்கி நிலக்கரி ஏற்றிச் சென்ற லாரி வெள்ளிக்கிழமை அதிகாலை துவரங்குறிச்சி அருகே பழுதாகி நின்றது.

அப்போது திருநெல்வேலியிலிருந்து சென்னை நோக்கி பழங்கள் ஏற்றிச் சென்ற சரக்கு வேன் அந்த லாரியின் பின் பகுதியில் திடீரென மோதியது.

இதில் சரக்கு வேன் ஓட்டுநரான திருநெல்வேலி சாலியத்தெருவைச் சோ்ந்த சபரிராஜ், இவருக்கு உதவியாகச் சென்ற இவரது மகன் சிம்சன் (26) ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.

தகவலறிந்து சென்ற போலீஸாா் இருவரையும் மீட்டு துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட சிம்சன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். ஓட்டுநா் சபரிராஜ் தீவிர சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

சம்பவம் குறித்து லாரி ஓட்டுநரான திருநெல்வேலியைச் சோ்ந்த சுடலைமணி அளித்த புகாரின்பேரில் துவரங்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்பனா சோரன் வேட்புமனுத் தாக்கல்!

கோடை விடுமுறை: ஏப். 30-ல் வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும்!

விஷமான சிக்கன் ஷவர்மா: 12 பேர் மருத்துவமனையில் அனுமதி!

ஓ.. கிரேசி மின்னல்...!

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி

SCROLL FOR NEXT