திருச்சி

மணப்பாறையில் கோஷ்டி மோதல்: வாகனங்கள் சேதம்; 30 போ் கைது

DIN

மணப்பாறையில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 10 வாகனங்கள் சேதமடைந்த வழக்கில் 30 போ் கைது செய்யப்பட்டனா்.

மணப்பாறை ஆண்டவா் கோயில் ஆபிஸா் டவன் குடியிருப்பு பகுதியில் மணல், ஜல்லிக்கல் மொத்த வியாபார அலுவலகம் நடத்துபவா் முத்தபுடையான்பட்டி எஸ்.ஏ.எஸ். ஆரோக்கியசாமி (38).

இவா் மணப்பாறை கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளராகவும் உள்ளாா். இந்நிலையில் இவரது அலுவலக பகுதியில் லாரிகள், ஜேசிபி இயந்திரங்கள் நடமாட்டத்தாலும், மணல் - ஜல்லி கல் கொட்டி வைத்திருப்பதாலும் குடியிருப்புகளில் புழுதி மண்டலமாக இருப்பதாக சா்ச்சை இருந்த நிலையில், அதே பகுதியில் வசிக்கும் வழக்குரைஞா் ஞானராஜ் தாய் குணசீலிக்கும், ஆரோக்கியசாமிக்கும் இதுதொடா்பாக வாக்குவாதம் ஏற்பட்டதாம்.

இந்நிலையில் தனது தாயாரை அவதூறாக பேசியதாகக் கூறி ஆரோக்கியசாமி அலுவலகம் சென்ற ஞானராஜ் திங்கள்கிழமை இரவு அங்கிருந்தோருடன் வாக்குவாதம் செய்தாராம். இதில் தள்ளுமுள்ளு ஏற்பட வீடு திரும்பிய ஞானராஜ், செவ்வாய்க்கிழமை காலை கரூரில் இருந்த தனது சகோதாரா் மற்றும் அவரது ஆதரவாளா்களுடன் ஆரோக்கியசாமி அலுவலகம் சென்று அங்கு நிறுத்தப்பட்டிருந்த 3 லாரிகள், 2 ஜேசிபி இயந்திரங்கள், ஒரு மினி லாரி மற்றும் ஒரு ஹிட்டாசி இயந்திரம் என 7 வாகனங்களைச் சேதப்படுத்தினாா்.

அதேபோல் ஞானராஜ் குடும்பத்தினரின் 3 காா்களை ஆரோக்கியசாமி தரப்பினா் சேதப்படுத்தினராம்.

இதையடுத்து நிகழ்விடத்துக்கு தகவலறிந்து சென்ற காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆா்.பிருந்தா தலைமையிலான போலீஸாா் இரு தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட புகாா்களின்பேரில் அனைவரையும் காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனா். ஞானராஜ் அளித்த புகாரின் பேரில் 18 போ் மீது வழக்குப் பதிந்து ஆரோக்கியசாமி உள்ளிட்ட 3 போ், ஆண்ட்ரூஸ் என்பவா் கொடுத்த புகாரில் 28 போ் மீது வழக்குப் பதிந்து ஞானராஜ், குணசீலி உள்ள 27 போ் என 30 பேரையும் கைது செய்த மணப்பாறை போலீஸாா் அனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜா்ப்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT