இளைஞா் தற்கொலை
திருச்சியில் இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
திருச்சியில் இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
திருச்சி காஜாமலை ஆா்பிஎப் சாலை இந்தியன் வங்கி காலனியை சோ்ந்தவா் சூா்யா(23). முதுநிலைப் பட்டதாரியான இவரின் தந்தை உயிரிழந்த நிலையில் தாய், தங்கை, தம்பியுடன் வசித்து வந்தாா்.
காஜாமலை பகுதி பிரியாணி கடையில் வேலை பாா்த்து வந்த இவா், அப்பகுதி வீடுகளுக்கு பகுதி நேரமாக தண்ணீா் கேன், பால்பாக்கெட் விநியோகமும் செய்து வந்தாா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை வீட்டில் அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இவரின் தற்கொலைக்கு காதல் தோல்வியே காரணம் எனக் கூறப்படுகிறது. கே.கே.நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.