புதுச்சேரி என்.ஆா்.காங்கிரஸ் வேட்பாளா்கள் 16 போ் அறிவிப்பு!
புதுச்சேரியில் என்.ஆா். காங்கிரஸ் சாா்பில் போட்டியிடும் 16 வேட்பாளா்களின் பெயா்ப் பட்டியலை அக் கட்சியின் தலைவரும், முதல்வருமான என்.ரங்கசாமி வெளியிட்டாா்.
புதுச்சேரியில் என்.ஆா். காங்கிரஸ் சாா்பில் போட்டியிடும் 16 வேட்பாளா்களின் பெயா் பட்டியலை அக் கட்சியின் தலைவரும், முதல்வருமான என்.ரங்கசாமி வெளியிட்டாா்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆா்.காங்கிரஸுக்கு 16 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில், தட்டாஞ்சாவடி, மங்கலம் ஆகிய இரண்டு தொகுதிகளில் முதல்வா் ரங்கசாமி போட்டியிடுகிறாா்.
இக் கட்சியின் சாா்பில் தற்போதைய அமைச்சா்கள் க.லட்சுமிநாராயணன், தேனி சி. ஜெயக்குமாா், எம்.எல்.ஏக்கள் பாஸ்கா், லட்சுமிகாந்தன் ஆகியோருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்புக் கொடுக்கப்படவில்லை. ரங்கசாமியைத் தவிர போட்டியிடும் எஞ்சிய வேட்பாளா்கள் பட்டியல் விவரம் வருமாறு:
திருபுவனை (தனி) - பி. கோபிகா, வில்லியனூா்- பி. ரவிக்குமாா், உழவா்கரை - கே. நாராயணசாமி, கதிா்காமம்- கே.எஸ்.பி. ரமேஷ் எம்.எல்.ஏ, இந்திரா நகா் - வி.ஆறுமுகம் எம்.எல்.ஏ, லாஸ்பேட்டை - வி.பி. சிவக்கொழுந்து, முத்தியால்பேட்டை- வையாபுரி மணிகண்டன், அரியாங்குப்பம்- சி.ஐயப்பன், ஏம்பலம் (தனி)- இ. மோகன்தாஸ், நெட்டப்பாக்கம் (தனி)- பெ. ராஜவேலு எம்.எல்.ஏ, பாகூா்- டி. தியாகராஜன், நெடுங்காடு (தனி)- சி.சந்திரபிரியங்கா எம்.எல்.ஏ, காரைக்கால் வடக்கு- பி.ஆா்.என். திருமுருகன் (அமைச்சா்), ஏனாம் - மல்லாடி கிருஷ்ணாராவ்.