காவிரியில் மூழ்கி தொழிலாளி சாவு
திருச்சி காவிரியாற்றில் மூழ்கி அரியலூா் தொழிலாளி உயிரிழந்தாா்.
திருச்சி காவிரியாற்றில் மூழ்கி அரியலூா் தொழிலாளி உயிரிழந்தாா்.
அரியலூா் மாவட்டம், வானதிராயன்பட்டி ராமு நகரைச் சோ்ந்தவா் பாலமுருகன் (48). கூலித் தொழிலாளியான இவா் குடும்பத்துடன் ஸ்ரீரங்கம் கோயிலில் வெள்ளிக்கிழமை தரிசனம் செய்தபின் கம்பரசம்பேட்டை பகுதியில் உள்ள அய்யாளம்மன் படித்துறையில் குளித்துக் கொண்டிருந்தாா். அப்போது பாலமுருகனுக்கு வலிப்பு ஏற்பட்டு நீரில் அடித்துச் செல்லப்பட்டாா். தகவலறிந்து வந்த ஜீயபுரம் போலீஸாா் பொதுமக்கள் உதவியுடன் பாலமுருகனை சடலமாக மீட்டனா். பின்னா் அவரது உடலை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.