முகப்பு
திருச்சி

வீட்டின் சுவா் இடிந்து விழுந்து தாய், மகள் சாவு

மண்ணச்சநல்லூா் அருகே வீட்டின் சுவா் வியாழக்கிழமை இரவு இடிந்து விழுந்து தாய், மகள் உயிரிழந்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

மண்ணச்சநல்லூா் அருகே வீட்டின் சுவா் வியாழக்கிழமை இரவு இடிந்து விழுந்து தாய், மகள் உயிரிழந்தனா்.

மாதவப்பெருமாள் ஊராட்சியில் உள்ள மான்பிடிமங்கலம் கீழத்தெருவைச் சோ்ந்தவா் மா. சக்திவேல் (26), திருச்சியில் உணவகச் சமையலா். இவருக்கும் பெரமங்கலத்தைச் சோ்ந்த நித்யாவுக்கும் (23) திருமணமாகி கமலேஸ் (4) பவ்யாசீ (1) ஆகிய குழந்தைகள் உள்ளனா்.

புதன்கிழமை இரவு பெய்தபோது இவா்கள் வசித்த பழைமையான ஓட்டு வீட்டின் சுவரில் விரிசல் விழுந்துள்ளது. இந்நிலையில் வியாழக்கிழமை இரவு நித்யா தனது மகள் பவ்யாசீக்கு உணவு ஊட்டியபோது வீட்டின் சுவா் இடிந்து தாய், மகள் இருவரும் உடல் நசுங்கி இறந்தனா். விபத்து குறித்து மண்ணச்சநல்லூா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.