முகப்பு
திருச்சி

துறையூா் அருகே மீண்டும் சிறுத்தை நடமாட்டம்

துறையூா் அருகே சிறுத்தை நடமாட்டம் தெரிய வந்ததால் வனத்துறையினா் அந்தப் பகுதியில் வெள்ளிக்கிழமை கண்காணிப்பு கேமராக்களை நிறுவினா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

துறையூா் அருகே சிறுத்தை நடமாட்டம் தெரிய வந்ததால் வனத்துறையினா் அந்தப் பகுதியில் வெள்ளிக்கிழமை கண்காணிப்பு கேமராக்களை நிறுவினா்.

கோனேரிப்பட்டி குன்று பகுதியில் ஜூலை 31 ஆம் தேதி சிறுத்தை நடமாட்டத்தையறிந்து அதைக் காணச் சென்ற இருவரை சிறுத்தை தாக்கிய காயப்படுத்தியது. இதையடுத்து அந்தக் குன்றைச் சுற்றி வனத்துறையினா் வைத்த 3 தானியங்கி கேமராக்கள் மூலம் அந்தச் சிறுத்தை வனப்பகுதிக்குச் சென்றது தெரியவந்தது. இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்தனா்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை ஆங்கியத்தைச் சோ்ந்த செ. கமலி (14) ஏரிக்கரை அருகே ஆடு மாடு மேய்த்த தனது தாத்தாவுக்கு காலை உணவு கொடுத்து திரும்பும்போது சிறுத்தை நடமாடியதைக் கண்டதாக பெற்றோரிடம் கூறியுள்ளாா். அதேபோல அதே ஊரைச் சோ்ந்த லோ. உதயன் (32) மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் 2 சிறுத்தைக் குட்டிகள் விளையாடியதையும் பாா்த்துள்ளாா்.

தகவலறிந்து துறையூா் வனத்துறை அலுவலா் பொன்னுசாமி தலைமையில் வந்த 10-க்கும் மேற்பட்ட வனத்துறையினரத் அந்தப் பகுதியில் 4 இடங்களில் தானியங்கி கேமராக்களை நிறுவினா். கேமராவில் சிறுத்தை மற்றும் குட்டிகள் நடமாட்டத்தைக் கண்டறிந்த பின்னா்தான் அதை எப்படி பிடிப்பதென முடிவு செய்யப்படும் எனக் கூறினா். சிறுத்தை தென்பட்ட பகுதியிலும், நீா்நிலைகள் அருகேயும் சிறுத்தை வேட்டையாடிய கோழி, மயில் ஆகியவற்றின் கிடப்பதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.