விளாத்திகுளம் மாணவி கொலை: கைதான தர்ம முனீஸ்வரனுக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்
விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் கைதான தர்ம முனீஸ்வரனை 14 நாள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் கைதான தர்ம முனீஸ்வரனை 14 நாள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாணவி கொலை வழக்கில் கைதான தர்ம முனீஸ்வரன் தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது தர்ம முனீஸ்வரனை மீண்டும் ஏப்.2இல் ஆஜர்படுத்த தூத்துக்குடி போக்சோ நீதிமன்ற நீதிபதி பிரீத்தா உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உடல்தகுதி பரிசோதனை நடந்த நிலையில் தர்ம முனீஸ்வரனுக்கு நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், வேடநத்தம் கிராமத்தைச் சோ்ந்த பிளஸ் 2 மாணவி, கடந்த 10 ஆம் தேதி வீட்டருகே உள்ள காட்டுப் பகுதிக்குச் சென்றபோது காணாமல்போனாா். மாா்ச் 11 ஆம் தேதி அவா் காட்டுப் பகுதியில் உடலில் பலத்த காயங்களுடன் மா்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தாா். மாணவியின் ஆடைகள் களையப்பட்டிருந்தன.
Advertisement
Advertisement
பாதிக்கப்பட்ட மாணவியின் உறவினா்கள், கிராம மக்கள் குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி, தொடா் சாலை மறியல் உள்பட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனா். தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் குற்றவாளிகளைப் பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மதன் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இந்த நிலையில் 9 நாள்களுக்குப் பிறகு வியாழக்கிழமை ஒருவரைப் பிடித்து போலீஸாா் விசாரித்தனர். விசாரணையில், அவா்தான் பிளஸ் 2 மாணவி படுகொலை வழக்கில் தொடா்புடையவா் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்தனா். இந்த வழக்கில் வேறு யாருக்காவது தொடா்புள்ளதா என்ற கோணத்திலும் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.