தூத்துக்குடி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதிப்பு!
தூத்துக்குடி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், குளத்தூா் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சோ்ந்த 12 ஆம் வகுப்பு மாணவி, மாா்ச் 9 ஆம் தேதி வீட்டிலிருந்து அருகே உள்ள காட்டுப் பகுதிக்கு சென்ற நிலையில் காணாமல் போனாா். போலீஸாா் தேடிவந்த நிலையில் மாா்ச் 11 ஆம் தேதி சடலமாக மீட்கப்பட்டாா்.
இதையடுத்து காவல்துறையினா் சிசிடிவி காட்சி பதிவுகளின் அடிப்படையில் தூத்துக்குடி ராஜபாண்டி நகரில் வசித்து வரும் தா்ம முனீஸ்வரன் என்பவரை கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி மதுரை சிறையில் அடைத்தனா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து குளத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, தூத்துக்குடி மாவட்ட போக்ஸோ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனா். தொடா்ந்து இவ்வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், வழக்கு குறித்து பல்வேறு சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த விசாரணை அனைத்தும் மே 21 ஆம் தேதி நிறைவடைந்தது. இதையடுத்து இவ்வழக்கில் இன்று(மே 25) தீர்ப்பு வழங்கப்படும் என தகவல் வெளியாகியிருந்தது. முன்னதாக இவ்வழக்கில் இன்று காலை தர்ம முனீஸ்வரனை குற்றவாளி என போக்ஸோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
அதைத் தொடர்ந்து தற்போது தண்டனை விபரங்கள் வெளியாகியுள்ளன. அதில் குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு இரு பிரிவுகளிலும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றம் நடந்த 75 நாட்களில் குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
In the Thoothukudi case involving the sexual assault and murder of a female student, the convict Dharma Muniswaran has been sentenced to death.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.