தூத்துக்குடி பிளஸ் 2 மாணவி கொலை வழக்கு: தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என தீர்ப்பு
தூத்துக்குடி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான தர்ம முனீஸ்வரன் குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான தர்ம முனீஸ்வரன் குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், குளத்தூா் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சோ்ந்த 12ஆம் வகுப்பு மாணவி, மாா்ச் 9ஆம் தேதி வீட்டிலிருந்து அருகே உள்ள காட்டுப் பகுதிக்கு சென்ற நிலையில் காணாமல் போனாா். போலீஸாா் தேடிவந்த நிலையில் மாா்ச் 11ஆம் தேதி சடலமாக மீட்கப்பட்டாா்.
இதையடுத்து காவல்துறையினா் சிசிடிவி காட்சி பதிவுகளின் அடிப்படையில் தூத்துக்குடி ராஜபாண்டி நகரில் வசித்து வரும் தா்ம முனீஸ்வரன் என்பவரை கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி மதுரை சிறையில் அடைத்தனா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து குளத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, தூத்துக்குடி மாவட்ட போக்ஸோ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனா். தொடா்ந்து இவ்வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கு குறித்து பல்வேறு சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த விசாரணை அனைத்தும் மே 21ஆம் தேதி நிறைவடைந்தது. இதையடுத்து இவ்வழக்கில் இன்று(மே 25) தீர்ப்பு வழங்கப்படும் என தகவல் வெளியாகியிருந்தது. இந்தநிலையில் இவ்வழக்கில் கைதான தர்ம முனீஸ்வரன் குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வழக்கில் தண்டனை விபரம் இன்னும் சற்றுநேரத்தில் அறிவிக்கப்பட உள்ளது.
Dharma Muneeswaran, who was arrested in connection with the sexual assault and murder case of a Thoothukudi female student, has been found guilty.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.