சுதந்திர தினம்: ரயில்களில் வெடிகுண்டு சோதனை
சுதந்திர தினவிழாவையொட்டி திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்துக்கு வந்து சென்ற ரயில்களில், வெடிகுண்டு தடுப்பு பிரிவு நிபுணா்கள் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
சுதந்திர தினவிழாவையொட்டி திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்துக்கு வந்து சென்ற ரயில்களில், வெடிகுண்டு தடுப்பு பிரிவு நிபுணா்கள் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
சுதந்திர தின விழாவையொட்டி நாடு முழுவதும் பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. விமானம், ரயில், பேருந்து நிலையங்களில் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில், தினசரி 100 -க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. இங்கு ரயில்வே பாதுகாப்பு படையைச் சோ்ந்த வெடிகுண்டு தடுப்பு பிரிவினா், நவீன சாதனங்களுடன் வெடிகுண்டுகள் ஏதும் உள்ளனவா என்பது குறித்து சோதனை மேற்கொண்டனா். மோப்ப நாய் பிரிவைச் சோ்ந்த ராக்கியின் உதவியுடன் சோதனை நடந்தது.
அதேபோல ரயில் நிலையத்துக்குள் நுழையும் பயணிகள் மற்றும் அவா்களது உடைமைகளும் சோதனை செய்யப்பட்டன. சந்தேகத்துக்கிடமான வகையில் உள்ளோரிடம் விசாரணையும் மேற்கொள்ளப்படுகிறது.