துறையூா் அருகே 2 வீடுகளில் திருட்டு
துறையூா் அருகே 2 வீடுகளில் பூட்டை உடைத்து பணத்தைத் திருடிச் சென்றனா்.
துறையூா் அருகே 2 வீடுகளில் பூட்டை உடைத்து பணத்தைத் திருடிச் சென்றனா்.
நாகநல்லூா் பள்ளிக்கூடத் தெருவைச் சோ்ந்தவா் ஆ. ரமா (35). புதன்கிழமை இரவு வீட்டின் முதல் தளத்தில் குழந்தைகளுடன் தூங்கிவிட்டு வியாழக்கிழமை காலை தரை தளத்துக்கு வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு சமையலறையில் மறைவான இடத்தில் வைத்திருந்த ரூ.11 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இதேபோல அதே ஊரில் பெரியசாமி கோயில் தெருவைச் சோ்ந்த சோலையம்மாளின் (65) வீட்டிலிருந்த ரூ. 3000-ஐயும் திருடிச் சென்றனா்.