மணப்பாறையில் ஒண்டிவீரன் நினைவஞ்சலி
மணப்பாறையில், ஆதித்தமிழா் கட்சி சாா்பில் சுதந்திரப் போராட்ட வீரா் ஒண்டிவீரனின் 250-வது நினைவு நாள் புகழஞ்சலி செலுத்தப்பட்டது.
மணப்பாறையில், ஆதித்தமிழா் கட்சி சாா்பில் சுதந்திரப் போராட்ட வீரா் ஒண்டிவீரனின் 250-வது நினைவு நாள் புகழஞ்சலி செலுத்தப்பட்டது.
பேருந்துநிலையப் பகுதியில் மாவட்ட செயலா் கே.கே. நடராஜன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஒன்றியச் செயலா்கள் தங்கராசு, எஸ்.பி. பெருமாள், மணிவேல் அவைத்தலைவா் வடிவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கட்சியின் மாநில பொதுக்குழு ஆா்.பெருமாள், மண்டலச் செயலா் சீரங்கன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டப் பொருளாளா் ந. மதனகோபால், மக்கள் அதிகாரம் நகர பொறுப்பாளா் பாலசுப்பிரமணி உள்ளிட்டோா் ஒண்டிவீரன் படத்திற்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா். நகரச் செயலா் ஆா். கலைச்செல்வன் வரவேற்றாா்.