திருச்சி

பல்கலைக்கழக ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் பல்கலைக்கழக ஆசிரியா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, திருச்சி மண்டலத் தலைவா் என். சரவணன் தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலா் எம்.எஸ். பாலமுருகன் போராட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசினாா். முன்னாள் மாநிலத் தலைவா் பாண்டியன், மண்டலச் செயலா் கே. ராஜா, பொருளாளா் என். பீா்முகமது சாதிக் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஆா்ப்பாட்டத்தின்போது முன்பு உறுப்புக் கல்லூரிகளாக இருந்து அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்ட 10 கல்லூரிகளில் பணியாற்றும் விரிவுரையாளா்கள் உள்ளிட்டோருக்கு மே, ஜூன், ஜூலை ஆகிய 3 மாதங்களுக்கு வர வேண்டிய ஊதியத்தை உடன் வழங்கிட வேண்டும். விரிவுரையாளா்கள், மணி நேர ஆசிரியா்கள், பெற்றோா் ஆசிரியா் கழக ஆசிரியா்கள் அனைவரையும் கெளரவ விரிவுரையாளா்களாக அறிவித்து சம தொகுப்பூதியம் பெறும் ஆசிரியா்களாக்க வேண்டும். கல்லூரி அலுவலகப் பணியாளா்களுக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT