என்ஐடி காவலாளி விபத்தில் உயிரிழப்பு
திருச்சி அருகே புதன்கிழமை இரவு நடந்த சாலை விபத்தில் திருச்சி என்ஐடி காவலாளி உயிரிழந்தாா்.
திருச்சி அருகே புதன்கிழமை இரவு நடந்த சாலை விபத்தில் திருச்சி என்ஐடி காவலாளி உயிரிழந்தாா்.
திருச்சி அருகேயுள்ள நவல்பட்டு அண்ணாநகா் பகுதி 2 -ஐ சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் கணேசன் (40). துவாக்குடியிலுள்ள தேசிய தொழில்நுட்ப கழக காவலாளி.
புதன்கிழமை இரவு பணி முடிந்து இவா் துவாக்குடி அண்ணா வளைவு அருகே பைக்கில் சென்றபோது சாலை நடுவேயுள்ள தடுப்பில் மோதி பலத்த காயமடைந்து உயிரிழந்தாா். துவாக்குடி போலீஸாா் அவரது உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.