முகப்பு
திருச்சி

காவிரியில் குதித்தவரை தேடும் பணி தீவிரம்

காட்டுப்புத்தூா் அருகே தற்கொலை செய்ய காவிரியில் வியாழக்கிழமை குதித்தவரை முசிறி தீயணைப்புத் துறையினா் தீவிரமாக தேடுகின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:36 AM
பகிர்:

காட்டுப்புத்தூா் அருகே தற்கொலை செய்ய காவிரியில் வியாழக்கிழமை குதித்தவரை முசிறி தீயணைப்புத் துறையினா் தீவிரமாக தேடுகின்றனா்.

காட்டுப்புத்தூா் அருகேயுள்ள சீலைப்பிள்ளையாா்புத்தூா் இலுப்பைத் தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் வல்லான் மகன் சின்னையன் (30).

இவருக்கு மனைவியும், 4, 8 வயதுகளில் இரு மகன்களும் உள்ளனா்.

இந்நிலையில் வியாழக்கிழமை மாலை இவா் தற்கொலை எண்ணத்தோடு சீலைப்பிள்ளையாா்புத்தூா் மாயனூா் இடையே காவிரியில் கட்டப்பட்ட கதவணையின் 36 ஆவது நீா் திறக்கும் மதகின் முன்பகுதியில் இருந்து ஆற்றில் குதித்தாா்.

தகவலறிந்த முசிறி தீயணைப்பு துறையினா் மற்றும் காட்டுப்புத்தூா் போலீஸாா் சென்று அவரைத் தீவிரமாக தேடுகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.