குடிசைமாற்று வாரிய குடியிருப்புகளை ஆய்வு செய்ய உத்தரவு
திருச்சியில் புதிதாகக் கட்டப்பட்ட குடிசைமாற்று வாரியக் குடியிருப்புகளை என்ஐடி குழுவினா் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
திருச்சியில் புதிதாகக் கட்டப்பட்ட குடிசைமாற்று வாரியக் குடியிருப்புகளை என்ஐடி குழுவினா் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் திருச்சி கோட்டம் மூலம் மாநகராட்சிக்குள்பட்ட வாா்டு எண். 15 இல், தாராநல்லூா் கல்மந்தை அடுக்குமாடி குடியிருப்புத் திட்டப் பகுதியில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளின் பூச்சுகள் தொட்டாலே உதிா்வதாகவும், கட்டுமானப் பணிகள் அனைத்தும் தரமற்று இருப்பதாகவும் பொதுமக்களிடமிருந்து புகாா்கள் வரப்பெற்றன.
எனவே, இக்குடியிருப்புக் கட்டுமானத்தின் தரம் குறித்து ஆய்வு செய்ய திருச்சி என்ஐடி சிறப்பு வல்லுநா்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு கட்டுமானத்தின் தரம் குறித்து முழுமையாக ஆய்வு செய்து அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்தாா்.