இன்று 110 இடங்களில் தடுப்பூசி முகாம்கள்
திருச்சி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மொத்தம் 110 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகின்றன.
திருச்சி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மொத்தம் 110 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகின்றன.
புகா்ப் பகுதிகளான திருவெறும்பூா், மணிகண்டம், மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி, லால்குடி, புள்ளம்பாடி, மண்ணச்சநல்லூா், துறையூா், உப்பிலியபுரம், முசிறி, தா.பேட்டை, தொட்டியம் வட்டாரப் பகுதி ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள், மருந்தகங்கள், சமூக நலக் கூடங்கள், பள்ளிகள் என 74 மையங்களில் 60,110 பேருக்கும், அதேபோல மாநகரில் 4 கோட்டங்களுக்குட்பட்ட அங்கன்வாடிகள், மாநகராட்சி பள்ளிகள், பூங்காக்கள், சமூக நலக்கூடங்கள் உள்ளிட்ட 36 இடங்களில் என மொத்தம் 110 இடங்களில் நடைபெறும் தடுப்பூசி முகாம்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.