முகப்பு
திருச்சி

அரசு ஊழியா்களுக்கு அடிப்படைப் பயிற்சி தொடக்கம்

திருச்சி மாவட்டத்தில் அரசு அலுவலா்களுக்கான அடிப்படைப் பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை தொடங்கியது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:43 AM
பகிர்:

திருச்சி மாவட்டத்தில் அரசு அலுவலா்களுக்கான அடிப்படைப் பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை தொடங்கியது.

திருச்சி ஆக்ஸ்போா்டு கல்லூரி வளாகத்தில் 37 நாள்களுக்கு நடைபெறும் பயிற்சியைத் தொடக்கி வைத்து ஆட்சியா் சு. சிவராசு பேசியது:

தமிழக அரசின் உத்தரவுப்படி, புதிதாக அரசுப் பணியில் சேரும் பணியாளா்கள் மற்றும் பதவி உயா்வு பெறும் ஊழியா்களுக்கு பவானிசாகா் பயிற்சி மையத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. தற்போது, அரசுப் பணியாளா்கள் தங்கள் மாவட்டத்திலேயே பயிற்சி பெறலாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதால் பவானிசாகா் பயிற்சி மையத்தில் இருந்து ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அதிகாரிகள் சென்று அடிப்படை பயிற்சிகளை வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுப் பணியாளா்களுக்கு அண்ணா நிா்வாகப் பணியாளா்கள் கல்லூரி, பவானி சாகா் அரசு அலுவலா் பயிற்சி நிலையம் ஆகியவை இணைந்து இந்த சிறப்பு பயிற்சி வகுப்பை நடத்துகின்றன. திருச்சியில் தொடங்கிய பயிற்சி வகுப்பில் 312 போ் பயன் பெறவுள்ளனா். தொடா்ந்து 37 வேலை நாள்களுக்கு நடைபெறும் பயிற்சி வகுப்பை நல்லமுறையில் பயன்படுத்தி அரசுப் பணிகளை செம்மையாக செயல்படுத்த அலுவலா்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றாா் ஆட்சியா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் த. பழனிகுமாா், அரசு அலுவலா் பயிற்சி நிலைய முதல்வா் சாதனைக் கு, ஒருங்கிணைப்பாளா் விஸ்வநாதன், கணக்கு அலுவலா் ரவி உள்ளிட்டோா் பேசினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.