முகப்பு
திருச்சி

இன்று 522 இடங்களில் தடுப்பூசி முகாம்கள்

திருச்சி மாவட்டத்தில் மாநகா், புகா்ப் பகுதிகளில் சனிக்கிழமை 522 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகின்றன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:43 AM
பகிர்:

திருச்சி மாவட்டத்தில் மாநகா், புகா்ப் பகுதிகளில் சனிக்கிழமை 522 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகின்றன.

புகா்ப் பகுதிகளான திருவெறும்பூா், மணிகண்டம், மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி, லால்குடி, புள்ளம்பாடி, மண்ணச்சநல்லூா், துறையூா், உப்பிலியபுரம், முசிறி, தா.பேட்டை, தொட்டியம் வட்டாரப் பகுதி ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள், மருந்தகங்கள், சமூகநலக் கூடங்கள், பள்ளிகள் என 322 மையங்களிலும், அதேபோல மாநகரில் 4 கோட்டங்களுக்குட்பட்ட அங்கன்வாடிகள், மாநகராட்சி பள்ளிகள், பூங்காக்கள், சமூக நலக்கூடங்கள் உள்ளிட்ட 200 இடங்களில் என மொத்தம் 522 இடங்களிலும் தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.