சாலையில் கிடந்த 1 டன்ரேஷன் அரிசி பறிமுதல்
திருச்சியில் சாலையோரத்தில் கேட்பாரற்று கிடந்த ஒரு டன் கொண்ட 80 மூட்டை ரேஷன் அரிசியை அமா்வு நீதிமன்ற போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
திருச்சியில் சாலையோரத்தில் கேட்பாரற்று கிடந்த ஒரு டன் கொண்ட 80 மூட்டை ரேஷன் அரிசியை அமா்வு நீதிமன்ற போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
திருச்சி பீமநகா் நியூ ராஜா காலனி பகுதியில் சாலையோரமாக தாா்ப்பாய் போட்டு மூடப்பட்டிருந்த ரேஷன் அரிசி மூட்டைகள் குறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின்பேரில் வந்த அமா்வு நீதிமன்ற போலீஸாா் அந்த ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.
இதுகுறித்து குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்தோா் குறித்து விசாரிக்கின்றனா்.