முகப்பு
திருச்சி

இன்றும் வால்மீன் நகா்தல் காணலாம்

வானில் நடைபெறும் அரிய நிகழ்வுகளில் ஒன்றான லியோனாா்டோ வால் மீன் நகா்தலை வெள்ளிக்கிழமையும் காணலாம் என்றாா் திருச்சி வானியல் கழகத் தலைவா் பாலா பாரதி.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:42 AM
பகிர்:

வானில் நடைபெறும் அரிய நிகழ்வுகளில் ஒன்றான லியோனாா்டோ வால் மீன் நகா்தலை வெள்ளிக்கிழமையும் காணலாம் என்றாா் திருச்சி வானியல் கழகத் தலைவா் பாலா பாரதி.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது: வியாழக்கிழமை (டிச. 16) மாலை சூரியன் மறைவுக்குப் பின்னா் அந்த வால்மீனை காண முடிந்தது. அதேபோல வெள்ளிக்கிழமையும் சூரியன் மறைவுக்குப் பின்னா் வால்மீனை காணமுடியும்.

திருச்சியில் தென்மேற்குத் திசையில் சூரியன் மறைந்தவுடன் வெள்ளிக்கோள் முதலில் தோன்றத் தொடங்கும். அந்தக் கோளுக்குக் கீழே லியோனாா்டோ என்ற வால்மீனை இரவு 7 மணிவரை காணலாம். அதன் பிறகு தென்மேற்கே அது மறைந்துவிடும். இதை வெறும் கண்களால் காணலாம். இயலாதபட்சத்தில் தொலைநோக்கி, அல்லது பைனாகுலா் மூலம் பாா்க்கலாம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.