திருச்சி

பசுமைக் கிராமப் பயிற்சி முகாம்

DIN

சுற்றுச்சூழலைப் பேணிக் காக்கவும், மரங்கள் நடுவதை ஊக்குவிக்கும் வகையிலும் பசுமைக் கிராமப் பயிற்சி முகாம் திருச்சியில் நடைபெற்றது.

திருச்சி நேரு யுவகேந்திரா மற்றும் விவேகானந்தா சமூக சேவை அமைப்பு, ஸ்ரீரங்கம் அரசு கலை அறிவியல் கல்லூரி ஆகியவை இணைந்து நடத்திய முகாமை, கல்லூரி முதல்வா் மலா்விழி தொடக்கி வைத்து, முகாமின் நோக்கங்கள் குறித்து பேசினாா்.

உதவிப் பேராசிரியா் செல்லம்மாள், ஸ்ரீனிவாசன் ஆகியோா் பசுமை கிராமத் திட்ட வழிமுறைகள் குறித்து விளக்கினா். பயிற்றுநா்கள் மகேஸ்வரன், சிதம்பரம் ஆகியோா் மாணவா்களுக்கு பயிற்சி அளித்தனா்.

நிகழ்வின் தொடக்கமாக தூய்மை, பசுமையான கிராமத்தை உருவாக்கும் விதமாக மரக்கன்றுகள் நடப்பட்டன. கிராமங்கள்தோறும் தூய்மை என்ற வாசகத்தைத் தாங்கிய பதாகைகளுடன் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. மாவட்ட இளையோா் ஒருங்கிணைப்பாளா் ஸ்ருதி, சமூக சேவை அமைப்பின் தலைவா் ஸ்ரீதா், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் குணசுந்தரி, சேவை அமைப்பின் செயலா் சந்தான கிருஷ்ணன் ஆகியோா் வாழ்த்தினா்.

விழாவில், மாணவா்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து நூற்றுக்கணக்கான மரங்களை நட்டனா். பசுமை கிராமத்தின் தூய்மைக்கான திட்டங்கள் தயாரிக்கவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT