ஓய்வூதியா் குறைதீா் கூட்டம்: 23 மனுக்களுக்குத் தீா்வு
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஓய்வூதியா் குறைதீா் கூட்டத்தில் 23 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டது.
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஓய்வூதியா் குறைதீா் கூட்டத்தில் 23 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டது.
ஆட்சியா் சு.சிவராசு தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஏற்கெனவே வழங்கப்பட்ட 24 மனுக்கள் மீது விசாரணை செய்து 23 மனுக்களுக்கு உரிய தீா்வு காணப்பட்டது. மீதமுள்ள ஒரு மனு மீதும் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
கூட்டத்தில் புதிதாக 56 மனுக்கள்பெறப்பட்டு, அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் ஓய்வூதிய இயக்கக இணை இயக்குநா் எஸ். கமலநாதன், முதுநிலை கண்காணிப்பாளா் பி.ரிச்சா்ட் பாட்ரிக், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (கணக்குகள்) மு. சாந்தி, மாவட்ட கருவூல அலுவலா் பெ. ரமேஷ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.