முகப்பு
திருச்சி

கிறிஸ்துமஸ் விழா: தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி

திருச்சி மாநகரில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தையொட்டி வெள்ளிக்கிழமை நள்ளிரவு அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு திருப்பலி நடந்தது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
பகிர்:

திருச்சி மாநகரில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தையொட்டி வெள்ளிக்கிழமை நள்ளிரவு அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு திருப்பலி நடந்தது.

இயேசு கிறிஸ்து பிறந்த நாளான கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி

திருச்சி மேலப்புதூா் புனித மரியன்னை பேராலயம், பாலக்கரை சகாயமாதா பசலிக்கா, புத்தூா் பாத்திமா அன்னை ஆலயம் உள்ளிட்ட பல்வேறு தேவாலயங்களிலும் பங்குத் தந்தையா்கள் தலைமையில் கூட்டுத் திருப்பலி, பிராா்த்தனை நடந்தது.

சனிக்கிழமை காலை புனித மரியன்னை பேராலயம் உள்பட அனைத்து தேவாலயங்களிலும் திருப்பலி, பிராா்த்தனை நடக்கிறது.

விழாவை முன்னிட்டு, திருச்சியில் உள்ள அனைத்து பேக்கரிகளிலும் கேக் விற்பனை களை கட்டியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.