முகப்பு
திருச்சி

அடையாளம் தெரியாதவாகனம் மோதி புள்ளிமான் பலி

சிறுகனூா் அருகே வனப்பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், 2 வயது புள்ளிமான் திங்கள்கிழமை உயிரிழந்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:26 PM
பகிர்:

சிறுகனூா் அருகே வனப்பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், 2 வயது புள்ளிமான் திங்கள்கிழமை உயிரிழந்தது.

லால்குடியிலிருந்து தச்சன்குறிச்சி வழியாக சிறுகனூா் செல்லும் சாலையில் உள்ள வனப்பகுதியில் மான் இறந்து கிடந்தது.

இதுகுறித்த தகவலின் பேரில், வனத்துறை அலுவலா்கள் நிகழ்விடத்துக்கு விரைந்து புள்ளிமானைக் கைப்பற்றினா். குமுளூா் கால்நடை மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்குப் பின்னா், புள்ளிமான் உடல் வனப்பகுதியில் புதைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.