முகப்பு
திருச்சி

‘வழக்கமான ரயில்கள் இயங்காத நிலையில் ரயில்வேக்கு லாபம்?’

கரோனா பொதுமுடக்கத்தில் வழக்கமான பயணிகள் ரயில் போக்குவரத்து இயங்காத நிலையில், மத்திய நிதி நிலை அறிக்கையில் ரயில்வேதுறை லாபத்தில் இயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:26 PM
பகிர்:

கரோனா பொதுமுடக்கத்தில் வழக்கமான பயணிகள் ரயில் போக்குவரத்து இயங்காத நிலையில், மத்திய நிதி நிலை அறிக்கையில் ரயில்வேதுறை லாபத்தில் இயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வேயில் பயணிகள் பிரிவில் கடந்த நிதியாண்டில் ரூ.50,669 கோடியாக வருவாய் இருந்தது. ஆனால், நடப்பு நிதியாண்டில் ரூ.1,500 கோடியாக குறைந்து உள்ளது.

சரக்குப் போக்குவரத்தில் ரூ.1,13,487 கோடியாக இருந்த வருவாய் ரூ.1,24,184 கோடியாக அதிகரித்துள்ளது. இதர வருவாயிலும் இழப்பே ஏற்பட்டு இருக்கிறது.

மொத்த வருவாய் கடந்த நிதியாண்டில் ரூ.1,74,694 கோடியாக இருந்தது. ஆனால், நடப்பு நிதியாண்டில் ரூ.1,46,609 கோடியாக சரிந்து உள்ளது.

ரயில்வேயில் வருவாய் இழப்பு கடுமையாக இருந்தாலும், கடந்த நிதியாண்டை விட நடப்பு நிதியாண்டில் ரயில்வே லாபத்தில் இயங்கி இருப்பதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது.

கடந்த நிதியாண்டில் ரயில்வே இயக்க விகிதம் 98.36 சதவிகிதமாக இருந்தது. நடப்பாண்டில் 96.96 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. கடந்த நிதியாண்டு நிகர லாபம் ரூ.1589.62 கோடி என்பது நடப்பு நிதியாண்டில் கூடுதலாக ரூ.2,800 கோடியாக எட்டியுள்ளது.

கரோனா தொற்றால் நடப்பு நிதியாண்டு தொடக்கம் முதல் இதுவரைவழக்கமான பயணிகள் ரயில்கள் இயக்கப்படவில்லை. சரக்கு ரயில்கள், சிறப்பு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வரும் நிலையில் ரயில்வே லாபத்தில் இயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் மாநில துணைப் பொதுச் செயலா் மனோகரன் கூறியது: கரோனா வருவாய் இடைவெளியை நிரப்பவும், ஓய்வூதிய நிதியில் ஏற்பட்ட கடும் நெருக்கடியை சரிசெய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி பொது வருவாயிலிருந்து ரூ.79,398 கோடி கடன் ரயில்வே

துறைக்கு வழங்கப்பட்டு உள்ளது. இந்த கடன் தொகை ரயில்வே வருவாய் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டதால் ரயில்வே லாபம் எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ரயில்வேக்கு வரும் நிதியாண்டுகளில் இந்த நிதி பெரும் சுமையாக மாறுக்கூடும். எனவே, கடனாக வழங்கப்பட்ட இந்த நிதியை பேரிடா்கால மானியமாக ரயில்வேக்கு அரசு தர வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.