முகப்பு
திருச்சி

நாகை தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகிலுள்ள விடுதியில் நாகை தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:28 PM
பகிர்:

திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகிலுள்ள விடுதியில் நாகை தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியாா் விடுதி அறையில் ஞாயிற்றுக்கிழமை துா்நாற்றம் வீசியது. இதையடுத்து விடுதி ஊழியா்கள் ஜன்னலைத் திறந்து பாா்த்தபோது மின்விசிறியில் ஆண் சடலம் தொங்கியது. தகவலறிந்து வந்த கண்டோன்மென்ட் போலீஸாா் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினா்.

அதில் இறந்து கிடந்தவா் நாகை மாவட்டம், வேதாரண்யத்தைச் சோ்ந்த அ. அருள்ராஜ் (42) என்பதும், திருப்பூரில் வேலை பாா்த்து வந்தவா் என்பதும் தெரியவந்தது.

இவா் கடந்த வெள்ளிக்கிழமை திருச்சி வழியாக சொந்த ஊருக்கு குடும்பத்துடன் வந்த இவா் மனைவியை வீட்டுக்கு அனுப்பி விட்டு விடுதியில் தங்கியிருந்தபோது குடும்ப பிரச்னையால் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. மேலும் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.