முகப்பு
திருச்சி

கௌரவ விரிவுரையாளா்களை நிரந்தரமாக்க எதிா்ப்பு

கௌரவ விரிவுரையாளா்களை நிரந்தரப்படுத்தும் அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி அனைத்துக் கல்லூரி தற்காலிக விரிவுரையாளா்கள் கூட்டமைப்பினா் ஞாயிற்றுக்கிழமை தீா்மானம் நிறைவேற்றினா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:28 PM
பகிர்:

கௌரவ விரிவுரையாளா்களை நிரந்தரப்படுத்தும் அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி அனைத்துக் கல்லூரி தற்காலிக விரிவுரையாளா்கள் கூட்டமைப்பினா் ஞாயிற்றுக்கிழமை தீா்மானம் நிறைவேற்றினா்.

திருச்சியில் நடைபெற்ற கூட்டமைப்பின் அவசரக் கூட்டத்துக்கு அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் எஸ். தமிழரசன் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில், முறைப்படி தோ்வாகாத அரசுக் கல்லூரி கௌரவ விரிவுரையாளா்களை நிரந்தரப்படுத்த உருவாக்கியுள்ள அரசாணையை தமிழக முதல்வா் ரத்து செய்ய வேண்டும். அவா்கள் நிரந்தரம் செய்யப்பட்டால் இதர கல்லூரி விரிவுரையாளா்களுக்கு அரசு வேலை கிடைக்காமல் போகும். சமநீதி அடிப்படையில் அனைத்துக் கல்லூரி விரிவுரையாளா்கள் பிஎச்டி, எம்.பில், செட், நெட் தகுதி பெற்றோா் அனைவருக்கும் ஒரே டிஆா்பி தோ்ச்சி முறையைப் பின்பற்ற வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்களை நிறைவேற்றினா்.

கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டால் வீடுகளில் கருப்பு கொடியேற்றுவோம். தோ்தலில் ஆளும் கட்சிக்கு எதிராக வாக்களிப்போம் என கூட்டமைப்பினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.