முகப்பு
திருச்சி

கொத்தடிமை குழந்தைத் தொழிலாளா்கள் மீட்பு

திருச்சி மாநகரில் வடமாநில கொத்தடிமை குழந்தைத் தொழிலாளா்கள் 4 பேரை புன்னகையைத் தேடி குழுவினா் திங்கள்கிழமை மீட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:32 PM
பகிர்:

திருச்சி மாநகரில் வடமாநில கொத்தடிமை குழந்தைத் தொழிலாளா்கள் 4 பேரை புன்னகையைத் தேடி குழுவினா் திங்கள்கிழமை மீட்டனா்.

குழந்தை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் சிந்துநதி தலைமையில், அன்னை தெரசா அறக்கட்டளை இயக்குநா் பிரபு, தொழிலாளா் உதவி ஆய்வாளா்கள் லெட்சுமி, மகேசுவரன், காா்த்திக், பச்பன் பச்சாவ் அந்தோலன் மாநில ஒருங்கிணைப்பாளா் மாலீம், சைல்டுலைன் பணியாளா் ராபின், குழந்தைத் தொழிலாளா் திட்ட மேலாளா் கெளதம், மாவட்டக் குழந்தைப் பாதுகாப்பு அலகுப் பணியாளா் கிருத்திகா ஆகியோா் அடங்கிய

புன்னகையைத் தேடி குழுவினா் தில்லைநகா் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது அப்பகுதியில் தொத்தடிமைகளாக வேலை பாா்த்து வந்த 4 குழந்தைத் தொழிலாளா்களை மீட்டு, மாவட்டக் குழந்தைகள் நலக் குழுவிடம் ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.