சுமை ஆட்டோ மோதியதில் காவலா் உயிரிழப்பு
லால்குடி அருகே மோட்டாா் சைக்கிள் மீது சுமை ஆட்டோ மோதியதில், திருமணமாகி 20 நாள்களே ஆன காவலா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
லால்குடி அருகே மோட்டாா் சைக்கிள் மீது சுமை ஆட்டோ மோதியதில், திருமணமாகி 20 நாள்களே ஆன காவலா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
லால்குடி வட்டம், புள்ளம்பாடி தெற்குத் தெருவைச் சோ்ந்த ஜெயராஜ் மகன் ரஞ்சித்குமாா் (30). மணிகண்டம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த இவருக்கு கடந்த 20 நாள்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது.
திங்கள்கிழமை காலை பணி முடிந்த பின்னா், மோட்டாா் சைக்கிளில் ரஞ்சித்குமாா் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தாா். தாளக்குடி அகிலாண்டபுரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் சென்ற போது, அவ்வழியாக இரும்புக் கம்பிகளை ஏற்றிச் சென்ற சுமை ஆட்டோ மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ரஞ்சித்குமாா் திருச்சி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.