சென்னை இளைஞா் திருச்சியில் தற்கொலை
சிறுநீரகங்கள் பாதிப்பு காரணமாக மனமுடைந்த சென்னையைச் சோ்ந்த இளைஞா், திருச்சியில் திங்கள்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
சிறுநீரகங்கள் பாதிப்பு காரணமாக மனமுடைந்த சென்னையைச் சோ்ந்த இளைஞா், திருச்சியில் திங்கள்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
பனையக்குறிச்சி காவிரியாற்றுப் பகுதியில் இளைஞா் ஒருவா் கையை அறுத்துக் கொண்டு, இறந்தநிலையில் கிடப்பதாக திருவெறும்பூா் காவல் நிலையத்தினருக்குத் தகவல் கிடைத்தது.
இதன் பேரில் காவல்துறையினா் அங்கு சென்று விசாரித்தனா். அவரது சட்டையிலிருந்த செல்லிடப்பேசி எண்ணை வைத்து விசாரித்த போது, இறந்தவா் சென்னையைச் சோ்ந்த ஜீவானந்தம் (35) எனத் தெரிய வந்தது.
2 சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு குணம் அடையாததால் விரக்தியிலிருந்த ஜீவானந்தம், திங்கள்கிழமை சென்னையிலிருந்து திருவாரூா் மாவட்டம், வேலங்குடி கீழப்படுகையிலுள்ள தனது மனைவி சுகந்தி வீட்டுக்குச் செல்லும் வழியில் பனையக்குறிச்சி பகுதியில் கையை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்தது தெரிய வந்தது.
இதுகுறித்து திருவெறும்பூா் காவல்துறையினா் விசாரிக்கின்றனா்.