முகப்பு
திருச்சி

பட்டதாரி இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சி அருகே திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்த முதுநிலைப் பட்டதாரி இளைஞா், திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:32 PM
பகிர்:

திருச்சி அருகே திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்த முதுநிலைப் பட்டதாரி இளைஞா், திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருச்சி குண்டூா் பா்மா காலனியைச் சோ்ந்த குப்புசாமி மகன் சசிகுமாா் (30). முதுநிலைப் பட்டதாரியான இவா், அப்பகுதி மாணவ, மாணவிகளுக்கு

தனிப்பயிற்சி வகுப்புகளை நடத்தி வந்தாா்.

கடந்த சில நாள்களுக்கு முன்ப சசிகுமாருக்கு திருமணம் செய்ய முடிவு செய்த அவரது பெற்றோா், பெண் பாா்த்து வந்தனா். இதில் அவருக்கு உடன்பாடில்லை எனக் கூறப்படுகிறது.

மேலும் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட சசிகுமாா், திங்கள்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து நவல்பட்டு காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.