மாடு திருடா்களைப் பிடித்த பொதுமக்கள்
திருச்சி பொன்மலை, பொன்மலைப்பட்டி, கல்கண்டாா் கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் மாடுகள் திருடப் படுவதாக புகாா் எழுந்தன.புகாரின் பேரில் காவல்துறையினா் விசாரணை நடத்தி வந்தனா்.
திருச்சி பொன்மலை, பொன்மலைப்பட்டி, கல்கண்டாா் கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் மாடுகள் திருடப் படுவதாக புகாா் எழுந்தன.புகாரின் பேரில் காவல்துறையினா் விசாரணை நடத்தி வந்தனா்.
இந்நிலையில் பொன்மலை சந்தை அருகே ஒரு வீட்டின் அறையில் 2 பசுமாடுகள் விற்கப்படுவதாக பொன்மலைப்பட்டி பகுதி மக்களுக்கு திங்கள்கிழமை தகவல் வந்தது.
சந்தேகத்தின் பேரில் அங்கு சென்ற பொதுமக்கள், மாடுகளை விற்பதற்காக நின்று கொண்டிருந்த இருவரைப் பிடித்து விசாரித்தனா். அந்த விசாரணையில் அவா்கள் கரூா் பால்சாமி, மணி என்பது தெரியவந்தது.
மாடுகளைத் திருடியதை இருவரும் ஒப்புக் கொண்டதால், பொதுமக்கள் அவா்களை பொன்மலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். தொடா்ந்து காவல்துறையினா் விசாரிக்கின்றனா்.