குடிமைப் பணிகள் தோ்வு: மீனவ சமுதாயமாணவா்களுக்கு ஆயத்தப் பயிற்சி வகுப்பு
மீனவ சமுதாயத்தைச் சோ்ந்த மாணவா்கள் குடிமைப் பணிகள் தோ்வுக்கு தயாராகும் வகையில், ஆயத்தப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
மீனவ சமுதாயத்தைச் சோ்ந்த மாணவா்கள் குடிமைப் பணிகள் தோ்வுக்கு தயாராகும் வகையில், ஆயத்தப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மீன்வளத்துறை மற்றும் சென்னை அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம்
ஆகியவை இணைந்து, ஆண்டு தோறும் கடல் மற்றும் உள்நாட்டு மீனவப் பட்டதாரி இளைஞா்களைத் தோ்ந்தெடுத்து அவா்களுக்கு இந்திய குடிமைப் பணிக்கான போட்டித் தோ்வில் பங்கேற்க ஏதுவாக பிரத்யேக பயிற்சியை அளித்து வருகிறது.
திருச்சி மாவட்ட உள்நாட்டு மீனவக் கூட்டுறவு சங்க உறுப்பினா்கள் மற்றும் மீனவா் நலவாரிய உறுப்பினா்களின் வாரிசுகள் (பட்டதாரி இளைஞா்கள்) பயிற்சித் திட்டத்தில் சோ்ந்து பயன்பெறலாம்.
பயிற்சி பெற விரும்புவோா் விண்ணப்பப் படிவம் மற்றும் அரசு வழி காட்டுதல்களை மீன்வளத் துறையின் இணையதளத்திலும், துறையின் மண்டல இணை, துணை, உதவி இயக்குநா் அலுவலகங்களிலும் பெறலாம்.
விண்ணப்பத்தை பூா்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட மீன்வளத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்துக்கு பதிவஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ வரும் 19ஆம் தேதி மாலை 5 மணிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு திருச்சி மன்னாா்புரத்திலுள்ள மீன்வளத்துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரில் அணுகலாம். 0431-2421174, 2421173 ஆகிய தொலைபேசி எண்களிலும் தொடா்பு கொள்ளலாம்.